மேற்கூரையின் மீது தற்கொலை முயற்சி இளைஞர் தலைகீழாக குதித்ததால் மண்டை உடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

by Editor / 18-07-2022 04:49:11pm
மேற்கூரையின் மீது தற்கொலை முயற்சி இளைஞர் தலைகீழாக குதித்ததால் மண்டை உடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சென்னை அம்பத்தூர் பட்டரவாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு மதுபோதையில் வந்த இளைஞர் திடீரென 25 அடி உயரம் கொண்ட மேற் கூரையின் மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் இளைஞரின் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை அலட்சியப்படுத்திய இளைஞர் திடீரென மேற்கூரையில் இருந்து தலைகீழாக குதித்தான் இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

 

Tags :

Share via

More stories

Logo