பரப்பரப்பை கூட்டும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்

by Editor / 08-02-2022 11:55:51pm
பரப்பரப்பை கூட்டும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.மேலும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.அதே நேரத்தில் சில  நகராட்சிகளிலும்,பேரூராட்சிகளிலும் திமுக,காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது,
இதுதவிர 10 ஆண்டுகளுக்குப்பின்னர் ஆட்சிக்கு திமுக வந்துள்ளதால் ஏராளமான திமுவினர் போட்டியிட  வாய்ப்பு  கேட்டும்  கிடைக்காதவர்களும், உள்ளூரில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு காரணமாகவும் சுயேச்சையாக பலர் களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.மேலும் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கொடுக்காமல் மாற்றுக்கட்சிகளில் இருந்துவந்தவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கபட்டுள்ளதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

முக்கியமான பொறுப்புக்களில் உள்ளவர்களால் இந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தங்களது உறவுகளுக்கு உதவிடும் வண்ணம் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் வழங்கபட்டும்,பாரபட்சமான செயல்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறி சிலர் பொறுப்புக்களில் இருந்து விலகியுள்ளனர்.நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் சில பகுதிகளில் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும்,சொந்த கட்சிக்காரர்களையே தோற்கடிக்க போட்டி வேட்பாளர்களையும் பொறுப்பாளர்கள் இறக்கிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.சில முக்கிய பொறுப்பாளர்களின் பொறுப்புக்களும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் முடிந்த பின்னர் முடிவுக்குவருவதற்கான பணிகளை பாதிக்கபட்டவர்கள் தலைமைகளுக்கு புகாராக தட்டிவிடும் பணிகளையும் தொடங்கியுள்ளனர்.

7ஆம் தேதி  மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. வார்டு தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் சுயேச்சை வேட்பாளர்களால் சிதறி விடக்கூடாது என்ற நோக்கத்திலும், இதன் காரணமாக வெற்றிவாய்ப்பு கைநழுவி சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும் பிரதான அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக களத்தில் நின்ற சுயேச்சை வேட்பாளர்களையம்,போட்டி வேட்பாளர்கள்,அதிருப்தி வேட்பாளர்கள் உள்ளிட்டவர்களை  வாபஸ் பெற வைப்பதற்கான அதிரடி முயற்சியில் இறங்கி தமிழகம் முழுவதும் ஏராளமான இடங்களில் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

இதன் காரணமாகபல  இடங்களில் சுயேச்சைவேட்பாளர்களும், ஒரு சில இடங்களில் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றனர்.சில இடங்களில் வேட்பாளர்களை காணவில்லை என கூறி அரசியல் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சுயேச்சைகளுக்கு நேற்று சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
 

 

Tags : local body elaction

Share via