அண்ணாத்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.ரசிகர்கள் கொண்டாட்டம்.

by Editor / 28-10-2021 05:23:13pm
அண்ணாத்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.ரசிகர்கள் கொண்டாட்டம்.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படம் தீபாவளியை முன்னிட்டு, வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. நீண்ட ஆண்டுகளுக்குப்பின்னர் தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் வெளியாவதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.மேலும் கொரோனா தொற்று விதிமுறைகளும் தளர்வுகளை அடைந்துள்ளதாலும் ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் அண்ணாத்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகியது. இதனை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்...

 

Tags :

Share via