இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகள்... 248 சிலைகளை ஒப்படைத்தது அமெரிக்கா...

by Editor / 29-10-2021 04:01:27pm
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகள்... 248 சிலைகளை ஒப்படைத்தது அமெரிக்கா...

இந்தியாவில் இருந்து திருடி அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட 248 சிலைகள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கால சிலைகள் திருடப்பட்டு, அமெரிக்க, ஐரோப்பா நாடுகளுக்கு விற்கப்படுகின்றன. சிலை கடத்தல் தொடர்பான விசாரணையும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட 12வது நூற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிலை உள்பட 248 சிலைகளை அமெரிக்கா அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.
 
இதுதொடர்பான நிகழ்ச்சியில் அமெரிக்காவின் மன்ஹாட்டன் மாவட்ட நீதிபதியிடம் இருந்து அந்த சிலைகளை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ரந்திர் குமார் ஜெய்ஸ்வால் பெற்றுக்கொண்டார். இதில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை மதிப்பு மட்டுமே 112 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via