சென்ன கேசவக் , சரவணபேலகோலா கோவில்

by Editor / 30-10-2021 08:07:24pm
சென்ன கேசவக் , சரவணபேலகோலா கோவில்

சென்ன கேசவக் கோவில்

         தலை காட்டில் நடந்த பிரம்மாண்ட போரில், சோழர்களை முறியடித்து, வெற்றி கண்டு, அதை கொண்டாடும் வகையில் விஷ்ணு பகவானின் 24 அம்சங்களில் ஒன்றான விஜயநாராயணப் பெருமாளுக்கு அர்ப்பணம் செய்து கட்டினார்கள். ஒரு சிலர், வைணவ குரு ராமானுஜர் சொற்படி, வைணவத்தை கடைபிடித்த விஷ்ணுவர்தனா  காலத்தில் கட்டியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். 1116ஆம் ஆண்டு விஷ்ணுவர்தனால் கட்ட ஆரம்பித்த கோவில், அவருடைய மகன், பின்பு பேரனால் கட்டி முடிக்கப் பெற்றது.

         இந்த ஹோய்சாலாவின் தலைசிறந்த கலைக்கூடம் 103 வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பிரம்மாண்டமான கோவில் உயர்ந்த மதில் சுவரால் கட்டப்பட்டுள்ளது. கருவறைக் கூடம், ஒரு தொடர் கூடம் ஒரு நவரங்க மண்டபம் இதனுள் அடங்கியுள்ளது. இதனுள்  சில சிறிய கோவில்களும், மண்டபங்களும் மற்றும் சில கட்டிடங்களும் உள்ளன. இரண்டு வாயில் நிலை உள்ளது. அவற்றுள் ஒன்றுக்கு மட்டுமே நுழைவு கோபுரம் 1397 ஆம் ஆண்டில் ஹரிஹரா-ll வின் தளபதி குண்டாவால் கட்டப்பட்டது. அதற்கு முன்பிருந்த பழைய பெரிய வாசல், துக்ளக்கின் சேனைத் தலைவன் கங்கா சலரால், இந்த கோவிலை வென்று, கைப்பற்றிய பின்பு எரித்து அழிக்கப்பட்டிருந்தது. சில கோவில்கள் சூழ்ந்திருக்க, மையத்தில் சற்று உயர்ந்த மேடை மேல், நன்கு ஆராய்ந்து, முனைந்து, ஒருமித்து கலைநுட்பத்துடன், ஒரு நட்சத்திர வடிவிலான ஒரு புனித இடம் அமைக்கப்பட்டது. இது பார்ப்பதற்கு மரத்தினால் குடைந்து செதுக்கப்பட்டது போலவும், ஒழுங்காகவும், சீராகவும், பளிச்சென்று மை தீட்டியது போல் காணப்படுகிறது. கர்ப்ப கிருகத்தின் விமானம், செங்கல், சுண்ணாம்பினால் கட்டப்பட்டு, மரத்தினால் தாங்கப்படுகிறது. தங்க முலாம் பூசிய தாமிரத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது.

          1879ஆம் ஆண்டு விமானம் நொறுங்கத் தொடங்கியதால், கர்ப் கிருகத்தைப் பாதுகாப்பதற்காக, அதை அகற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. கிழக்கு, வடக்கு, தெற்கு நோக்கி இருக்கும் வாயில்களும், விண் (கோபுரம்) தாங்கியாக இருக்கும் சிற்பங்கள் கலைச் சிறப்பையும் நுண்ணறிவையும் அவ்வளவு அழகாக வெளிப்படுத்துகின்றன கோவிலின் ஒவ்வொரு அங்குலமும் அவ்வளவு அழகாக குடவரை வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளது.

          வெளிச்சுவர்களில் 'ஜகாட்டிபோர்' வேலைப்பாடு அமைந்த உயர்மேடையும், இதற்கு சம கோடுகளில் யானை, சிங்கம், யாளி இடையில் பெரிய உருவங்களும் வேலை நுட்பமான ஆபரணங்களை அணிந்துள்ள பெண்மணிகளின் சிறிய உருவங்களும் மாறி மாறி செதுக்கி இணைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள இரண்டு வரிகளும் ஒன்றைவிட ஒன்று வித்தியாசமாக செய்யப்பட்டுள்ளது. மற்ற ஹோய்சாலா கோவில்களில் அமைந்துள்ளது போல, கீழ்நிலையில், அவ்வளவு வேலைப்பாடுகள் இல்லை. ஆனால், சுவற்றின் மேல் நிலையில் உள்ளதே அவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது. இதில் மிகவும் தாழ்வாக உள்ள செதுக்கிய நிலையில் 650 யானைகள் ஒவ்வொரு மனோபாவத்துடன் காணப்படுகின்றன. சில யானைகள் விளையாட்டாகவும், சில அமைதியாகவும் நின்றுகொண்டு இருக்கிறதாகவும், மற்றும் சில யானைகள் மதம் கொண்டு எதிர்க்கும் நிலையிலும் காணப்படுகின்றன. கோவில் வெளிப்புறத்திலும், 'நவரங்கா' கல்தூண் மண்டபத்திலும், தளத்தின் தாழ் நிலையையும், சுவற்றின் மேல் நிலையையும் இணைக்கும், தனியாக நிற்கும், இணைப்புகளும் வியப்பளிக்கக் கூடியவை. அந்த இணைப்புகளில் 'மதானிகா' என்னும் மிக அழகிய மனம் கவரும் மங்கை உருவங்கள், நடனம் ஆடுவது போலவும், பாரம்பரிய நிலையிலும் ஒரு தனித் திறமையை வெளிக்காட்டும் சிற்பங்களாக திகழ்கின்றன. வலமிருந்து நோக்குகையில், இந்த அழகு சிற்பங்கள் ஒவ்வொன்றும் கீழ்கண்டவாறு காணப்படுகின்றன.

  1. கையில் கண்ணாடியுடன் அழகி (சொப்பன சுந்தரி): ஒரு பெண் தன் இடது கையில் ஒரு கண்ணாடியை ஏந்திக் கொண்டு, அதில் தன் அழகை ரசிப்பதாக ஒரு ரம்யமான நிலையில் உள்ளது.
  2. பாடும் கிளி: ஒரு பதுமை தனது பாடும் கிளியுடன் பேசுவது போல் உள்ளது.
  3. வெற்றியுலையுடன் பெண்: ஒரு பெண் தன் கையில் வெற்றிலை மடித்து வைத்துக் கொண்டிறுப்பது போலவும், அவளை சூழ்ந்து பணிப் பெண்களும், அந்தப் பாவையின் வலப்புறம் ஒரு பணிப்பெண் நீர் நிறைந்த ஒரு பாத்திரத்தையும், இடப்புறம் மற்றொரு பணிப்பெண் குழலை நிரப்பிக் கொண்டிருப்பதாகவும் காணப்படுகிறது.
  4. அழகு சாதனங்களுடன் ஒரு பெண்: தனது பணிப்பெண்கள் அந்தப் பாவையை சூழ்ந்திருக்க, அவள் தன் காதலனுக்கு கடிதம் எழுதுகின்ற நிலையில்.
  5. புடவையை இழுக்கும் குரங்கு: ஒரு விஷமக்கார குரங்கு, புடவையை பிடித்து இழுக்கையில், அந்த மங்கை அதை ஒரு குச்சியைக் கொண்டு விரட்டும் பாவனையில். இது மிகவும் பிரசித்தியான ஒரு வடிவமைப்பு.
  6. வேடுவக் குலப் பெண்மணி: ஒரு பெண் வில் கொண்டு, அம்பு இழுத்து, குறி நோக்கும் நிலை.
  7. சிகை அலங்கரிக்கும் பெண்:பாவை ஒருவள் குளித்த பின், சிகை அலங்கரிக்க, அவள் பணிப்பெண்கள் பூவும், பொட்டும் ஏந்கி நிற்கின்றனர்.
  8. திரிபங்கி நிருத்தியா: ஒரு பெண் மிகவும் சிரமமான ' திரிபங்கி நிருத்தியா ' செய்துகொண்டு இருத்தல் . இதில் ஒரே சமயத்தில் மூன்று கலை பாவனம் காண்பித்தல் அரிது .
  9. பெண் சாமியார்: ஒரு பெண் சாமியார் போல் வேடம் தரித்தல் .
  10. முரசு நடனம்: ஒரு பாவை முரசு வாசித்தல் .
  11. புல்லாங்குழல் வாசிக்கும் பாவை: ஒரு பெண் புல்லாங்குழல் ஊத , அவள் அருகில் பணிப்பெண் .
  12. சங்கீத வித்வான்: பாடும் பெண் குயில் .
  13. உலகம் வியக்கும் அழகு: தெற்கு வாசல் அருகில் ஒரு அழகான பெண்ணின் உருவம் . அதன் அருகில் பலாப் பழத்தின் மேல் மொய்க்கும் ஒரு ஈயைப் பிடிக்க இருக்கும் பல்லியையும் வடித்துள்ளனர். மறுபக்கத்தில் இவ்வாறே செதுக்கியுள்ள அமைப்புகள் உள்ளன. அதற்கு வெள்ளிக்கிழமை வாயில் எனப் பெயரிட்டுள்ளனர். அது சில நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது.
  14. வயலின் வித்வான்: வயலின் வாத்தியத்துடன் ஒரு பெண்மணி.
  15. சுருட்டை முடி கொண்ட மகள்: ஒரு கையில் கண்ணாடி ஏந்தித் தன் வலது கரத்தினால் தன் சுருட்டை முடியைத் திருத்திக்கொள்ளும் நிலை.
  16. பழத் தோட்டக்காரி: ஒரு மாம்பழத்தை தன் வலது கையால் பறிக்கும் பெண்.
  17. ஆண் போல் ஒரு பெண்: ஒரு பெண், வேடுவன் உடையணிந்து பறவையை நோக்கி குறி பார்ப்பது போல் உள்ளது.
  18. ஒரு சாமியார் போல் பெண் வேடதாரி: இந்த வகையில், வரிசையில் உள்ள 18 - வது சிற்பம். அதிசயமாக ஒரு பெண்  ஆணைப் போல் வேடம் தரித்து, தாடி, மீசையுடன் இருப்பது. அவள் மேளம் வாசிக்க, இரு ஆண்கள் குரங்குத் தொப்பி அணிந்து 'மல்யுத்தம்' செய்வது போல் உள்ளது.

      இந்த வரிசையில் 19-வது வடிவமைப்பிற்கு முன்பு கீழ்க்கண்டவற்றையும் பார்க்கலாம்.

  • சிவ - ஜலந்தரா: ஒரு கோடியில், சிவன் தன் கையில் திரிசூலம் தாங்கி, தன் காலடியில் ஒரு பூதத்தை மிதித்துக் கொண்டு இருப்பதாக உள்ளது.
  • பூதானி: அவள் கைகளில் விதவிதமான ஆயுதங்கள் உள்ளன. அவள் நஞ்சம் கொண்டவள் எனத் தெரியும் வகையில், அவள் வயிற்றில் ஒரு தேளும், பாம்பும் உள்ளன.
  • மகாபலி சக்ரவர்த்தி, வாமனருடன்: வாமனர் (விஷ்ணுவின் ஒரு அவதளம்), மகாபலி முன்பு மூன்றடி நிலம் வேண்டி யாசிக்கும் காட்சி. அருகில் அசுர குரு சுக்ராச்சாரியாரும் உள்ளார்.
  • கைலாய மலையை ராவணன் தூக்கும் காட்சி: பத்து தலை கொண்ட அரக்கர்களின் அரசன் ராவணன், கைலாய மலையை தூக்கிக் கொண்டிருப்பதுபோல, அந்த மலையின் மேல் சிவனும் பார்வதியும் அமர்ந்திருப்பது தெரியும்.
  • சாமுண்டி: அரக்கன் மஹிசாசூரனைக் கொல்லும் தேவி சாமுண்டி.
  • பிரம்மா: அந்தப் படைப்பாளி தன் கலை நுண்ணாற்றலை, ஒரு செயினில் செதுக்கி, இயற்கையாகவும், நிஜமாகவும் காண வைத்திருக்கிறார்.
  • சூரிய பகவான்: ஏழு குதிரை பூட்டிய தேரில் சூரிய பகவான் வருவதாக ஒரு காட்சி.
  • நவீன பாவை: ஒரு பெண், நல்ல உடை அணிந்து, அவள் தலை முடியை ஒரு புதிய ரிப்பன் கொண்டுக் கட்டியிருக்கிறாள். அவள் ஒரு சங்கிலியில் கட்டப்பட்ட நாயுடன், மாலை நடைபயில ஆயத்தமாகி கொண்டு இருக்கிறாள்.
  • அர்ஜுனன் அம்பு எய்தல்: ஒரு தூணில் கட்டப்பட்டுள்ள மீனை, அதன் கீழ் பாத்திரத்தில் உள்ள எண்ணெயில் விழும் நிழலைப் பார்த்து மேல் நோக்கி அம்பு எய்யும் அர்ஜுனனை வடிவமைத்துள்ளனர்.

      19. வளைய நடனக்காரி: முதல் சிற்பம், பணிப்பெண்கள். வாத்தியம் வாசிக்க, அந்தப் பாவை வளைய நடனம் ஆடுவதாக தெரிகின்றது.

      20. பாடும் பெண்: மெய்க் காப்பாளர்களுடன் ஒரு பாடும் பெண்.

      21. தேவலோக நடனக்காரி: மிகவும் அழகாக நடனம் செய்யும் ஒரு தேவலோக நடனக்காரி.

     22. வேடுவக்காரி: ஒரு பெண், வேலொன்றுடன் அதன் முனையில் மண்டை ஓட்டுடன் ஏந்தி நிற்கிறாள். 

     23. வெற்றி கண்ட வேடுவக்காரி: ஒரு பெண் தன் வேட்டையை முடித்துத் திரும்புதல். அவளது பணிப்பெண்கள்  வேட்டையாடினவற்றை கொண்டு வருவது போலவும், அதில் ஒருவள் முட்களைப் பிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

     24. அழகான நடனம்: ஒரு பெண். நடனக் கலை பயில, அவளது பணிப்பெண்கள் வாத்தியம் வாசிக்கிறார்கள்.

     25. பஸ்ம மோகினி ஆட்டம்: வடக்கு வாசலின் அருகில், மிக சுவாரஸ்யமான பஸ்ம மோகினி ஆட்டத்தில் இருக்கும் பாவையை உருவாக்கியுள்ளார்கள். இந்தத் தனித்தன்மை வாய்ந்த சிற்பம், கைகளும் கால்களும் வேறு பாவனையோடு இருப்பினும், ஒரே நேர்க் கோட்டில் அமைந்திருப்பது அதிசயமாகும். வடக்கு வாசலுக்குப் பிறகும். இக்கலை தொடர்கிறது. 

     26. அழகும் தேளும்: இந்த சிற்பம் பயங்கொண்டு தன் புடவையின் மடிப்பிலிருந்து தேளைத் தள்ளிவிடும் ஒரு பாவையும், அதைக் கண்டும் அசையாத தேளும் பிரதிபலிக்கின்றன.

    27. சுவற்றிலும் அழகு: ஒரு பெண், தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு, தன் காதலனுக்காக காத்திருப்பது போல உள்ளது.

    28. ஒரு குறத்தி மகள்: பனை ஓலை தாங்கிய ஒரு குறத்தி மகள்.

    29. இளைப்பாறும் பெண்: அறுசுவை உண்டபின், சற்று இளைப்பாறப் போகும் பெண்.

    30. நாக வீணை நடனம்: அரவம் (பாம்பு) போல் அமைந்திருக்கும் வீணையை வாசிக்கும் ஒரு மங்கை.

    31. பெருமை சூழ் மங்கை: ஒரு பெண். நல்ல உடை அணிந்து, நகை நட்டுக்கள் அணிந்து, தன் அழகை நிலைக் கண்ணாடியில் கண்டு ரசிக்கும் காட்சி.

    32. குறி சொல்லும் குறத்தி: உலகின் ஜோசியத்தை எடுத்துரைக்கும் குறத்தி ஒருவள்.

    33. காத்தாடி ஆட்டகாரி: காத்தாடி நடனத்தில் மங்கை ஒருத்தி. கடைசியிலிருக்கும் இணைப்புப் பிம்பங்கள் அனைத்தும் மிக அழகுவாய்ந்த மங்கைகளை பல கோணத்திலும், செயல்களிலும் பிணைக்கின்றன.

    34. கூந்தலுடன் ஓர் அழகி: தன்னுடைய கூந்தலை அழகாக ம

சென்ன கேசவக் , சரவணபேலகோலா கோவில்
 

Tags :

Share via