மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு 18 ஆயிரம் கன அடியாக குறைப்பு.

by Admin / 11-11-2021 04:26:40pm
மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு 18 ஆயிரம் கன அடியாக குறைப்பு.

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 21 ஆயிரத்து 27 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 19 ஆயிரத்து 146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 19 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 21 ஆயிரத்து 27 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 19 ஆயிரத்து 146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் 18 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. கால்வாயில் 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 3 நாட்களாக மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியாக நீடிக்கிறது.

விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேற்றப்படுவதால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

Tags :

Share via