இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி..

by Editor / 18-11-2021 02:40:53pm
இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி..

 

இந்தியாவில், உலகின் மிக விரிவான பொது தகவல் உள்கட்டமைப்பை உருவாக்கி வருவதாக பிரதமர் மோடி பேசினார்.

சிட்னி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தலைமை உரையாற்றினார். அப்போது, ‘இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புரட்சி’ என்ற தலைப்பில் மோடி பேசியதாவது:-

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான கூட்டாண்மை பிராந்தியத்திற்கும் உலகிற்கும் நல்ல ஊக்க சக்தியாக உள்ளது.

டிஜிட்டல் யுகம் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் மாற்றிக்கொண்டிருக்கிறது. அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை மறுவரையறை செய்திருக்கிறது.
 
இறையாண்மை, நிர்வாகம், நெறிமுறைகள், சட்டம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு துறைகளில் டிஜிட்டல் யுகம் புதிய கேள்விகளை எழுப்புகிறது.

இந்தியாவில், உலகின் மிக விரிவான பொது தகவல் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். 1.3 பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு தனித்துவமான டிஜிட்டல் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.

600,000 கிராமங்களை பிராட்பேண்ட் மூலம் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில், தரவு பாதுகாப்பு, தனியுரிமை ஆகியவற்றின் வலுவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம்.

கோவின் மற்றும் ஆரோக்ய சேது செயலிகளைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் 1.1 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags :

Share via