கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக மத்திய அரசைகண்டித்து

by Admin / 23-07-2023 08:59:03pm
 கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக மத்திய அரசைகண்டித்து

மணிப்பூர் கலவரத்தில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட விவகாரமும் இரண்டு பழங்குடியின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையை கண்டித்தும் இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றது முதல் நாட்டையே வன்முறை காடாகி கொண்டிருக்கிறது. மணிப்பூரில் வன்முறையை தடுக்க பாரதிய ஜனதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நாட்டில் எங்கு எந்த பெண்களுக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் நாங்கள் குரல் கொடுப்போம் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி செய்யும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களுக்கு எதிராக இது போன்ற சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம் என்றும் உலகத்தையே  உலுக்கிய இந்த மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் இது இன்றைக்கு  தொடர்ந்த கலவரம் அன்று. இது ஆண்டாண்டு காலமாக நடந்து வருவதாகவும் குக்கி பழங்குடியின மக்களை போதை பொருள்கள் தயார் செய்கிறவர்கள். நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைபவர்கள் என்று கூறி மணிப்பூர் மாநில முதல்வர் புண்படுத்தி பேசும் வருவது வேதனைக்குரியது என்றும் பழங்குடியின ஒடுக்கப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வரின் செயல்பாடு உள்ளது என்றும் கூறினார். கடந்த மே மாதத்தில் தொடங்கிய இக்கலவரத்தில் மெய்லி இன மக்களுக்கு ஆளும் அரசை ஆயுதங்களை கொடுத்து வருவதாகவும் அங்கு கோவில்கள், சர்ச்சுகள் கொளுத்தப்படுகிறது என்றும் மனிதர்கள் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளார்கள் ..அத்துடன் பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியானது. மிகவும் வேதனை அளிப்பதாகவும் கூறினார். பெண்களை மேடையில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும் பெண்களை சுதந்திரமாக பாதுகாப்பான சூழலில் வைக்கக்கூடிய இந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தான் நாங்கள் கேட்கிறோம் என்றும் கனிமொழி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் உள்ளிட்ட மகளிர் அணி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்..

 கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக மத்திய அரசைகண்டித்து
 

Tags :

Share via