வேலை நிறுத்த போராட்ட காலங்களை முறைப்படுத்த வேண்டும்

by Editor / 18-11-2021 07:55:07pm
வேலை நிறுத்த போராட்ட காலங்களை முறைப்படுத்த வேண்டும்

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் முந்தய ஆட்சி காலத்தில் தம் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு காலகட்டங்களில் போராட்டம் நடத்தினர்.ஆனால்,அன்றைய அ ரசு அவர்களின் கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல்,போராட்டத்தை ஒடுக்கும்முகமாக பலரை இடமாற்றம் ,பணி இடை நீக்கம் செய்தும்,பணிக்கு வாராத  காலங்களுக்கு பணிபுரியவில்லை என்றால் ஊதியமில்லை என்றும் ஒழுங்கு  நடவடிக்கை யும்  மேற்கொள்ளப்பட்டது .பின்னர் தேர்தல் நேரத்தில் 2019ஆம்ஆண்டில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில்
கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகளை ரத்து செய்து அரசாணையில் ஆணைகள் வெளியிட்டது.

மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டக்காலங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தற்காலிகப்பணிநீக்கக்காலம் ஆகியவற்றை பணிக்காலமாக முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிககைகளை பணியாளர் சங்கங்கள் அரசுக்கு முன் வைத்து வந்தன.


அதனைத்தொடர்நது 07.09.2021நடைபெற்ற சட்டமன்றப்பேரவை கூட்டத்தில்,சட்டமன்றப்பேரவை விதி110ன் கீழ்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின் வரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அரசு ஊழியர்களுடைய வேலை நிறுத்தக்காலம் மற்றும் தற்காலிகப் பணி நீக்கக்காலம் ஆகியவை பணிக்காலமாக
முறைப்படுத்தப்படும்.

பணியிடை மாற்றம்செய்யப்பட்ட ஆசிரியர்கள்,அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில்கலந்தாய்வின்போது அவர்களுக்கான உரிய முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப்போராட்டங்களுடன்தொடர்புடைய தற்காலிகப்பணி நீக்கக்  காலமும் பணிக் காலமாக முறைப்படுத்தப்படுகிறதுஎன்கிற அரசாணைக்கிணங்க,கல்லூரிக்கல்வி இயக்குநர் அனைத்து மண்டல கல்லூரிக்கல்வி,இணை இயக்குநர்கள்,அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கும்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் . அதில்2016,2017 மற்றும்2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்கள் -பணியாளர்கள் பற்றிய விபரங்களை பதிவேட்டில் பதிவு செய்து பணப்பலன்களை விதிகளின்படி பெற்று வழங்க வேண்டுமாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via