அண்ணா பிறந்த நாள்700கைதிகள் விடுதலை தமிழ்நாடு அரசு அரசாணை

by Admin / 25-11-2021 09:52:05pm
அண்ணா பிறந்த நாள்700கைதிகள் விடுதலை தமிழ்நாடு அரசு அரசாணை

அண்ணா பிறந்த நாள்700கைதிகள் விடுதலை தமிழ்நாடு அரசு அரசாணை

மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 700சிறை கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவர் என்று சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில்,உள்துறை செயலாளர் பிரபாகர் அவர்கள் அரசாணைவெளியிட்டுள்ளார்.அதில்,113வது அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700ஆயுள் தண்டனைக்கைதிகளின் தண்டனையை,நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் குைறத்து,முன்னதாகவே விடுதலை செய்யப்படுவர் என்றும் பாலியல் வன்கொடுமை,தீவிரவாதம்,சாதி மத மோதலில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo