தெலுங்கானாவிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 70கிலோ கஞ்சா பறிமுதல் 2 நபர்கள் கைது.

by Editor / 26-11-2021 07:09:57pm
 தெலுங்கானாவிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட  70கிலோ கஞ்சா பறிமுதல் 2 நபர்கள் கைது.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு தினமும் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, கேஸ் சிலிண்டர், , காய்கறி ,உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு செல்கிறது, இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட பொருட்கள் கேரள மாநிலத்திற்கு வருகிறதா என்பது கண்காணிப்பதற்காக கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியான ஆரியங்காவு நுழைவு பகுதியில் காவல்துறை, வனத்துறை, மற்றும் மதுவிலக்கு துறை, ஆகிய சோதனைச்சாவடிகள் ஒருசேர அமைக்கப்பட்டுள்ளன, இந்த நிலையில் இன்று தெலுங்கானாவில் இருந்து தென்காசி புளியரை வழியாக வேகமாக ஆரியங்காவு அருகே வந்த வாகனத்தை கேரளமாநிலம் ஆரியங்காவு சோதனைச்சாவடியில் தென்மலை போலீசார்  நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அந்த வாகனத்தின் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10இலட்சம் மதிப்புள்ள  கஞ்சா பொட்டலங்கள் சுமார் 70 கிலோ பிடிபட்டது, இதுதொடர்பாக அதனை கடத்தி வந்த செம்பட்டி பிரமையா என்பவரும் குலசாமி ஹரிபாபு ஆகிய நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர், இதுகுறித்து புனலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வினோத் தெரிவிக்கும் பொழுது ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த வாகனத்தை சோதனை செய்ததாகவும் அதன் மூலம் தடை செய்யப்பட்டகஞ்சா கடத்தல் கண்டுபிடிக்கபட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றது கேரளாவில் யாருக்கு கொண்டுவந்து வினியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்து தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் நம்மிடம் தெரிவித்தார். தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்த தெலுங்கானாவை சேர்ந்த  செம்பட்டி பிரமையா  குலசாமி ஹரிபாபு என்பவரிடமும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

 தெலுங்கானாவிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட  70கிலோ கஞ்சா பறிமுதல் 2 நபர்கள் கைது.
 

Tags :

Share via