தமிழக அதிகாரிகள் கேரளாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை கண்டித்து மலையாள சமாஜம் முற்றுகை

by Editor / 27-11-2021 09:58:05pm
தமிழக அதிகாரிகள் கேரளாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ளதை கண்டித்து மலையாள சமாஜம் முற்றுகை

கோவை நவகரையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த ரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகிய இருவரிடம் தமிழக வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று ரயிலின் வேகம் குறித்த அறிக்கையினை பெறுவதற்காக பாலக்காடு சென்ற தமிழக அதிகாரிகளை கேரள ரயில்வே நிர்வாகத்தினரும், ரயில்வே போலீசாரும் சிறைபிடித்துள்ளனர்.

தமிழன வனத்துறையில் பணியாற்றும் வனவர் அருண்சிங், அய்யப்பன், வனகாப்பாளர்கள்
வனக் காப்பாளர்கள் சசி, பீட்டர் உட்பட 6 பேரை பாலக்காடு ரயில் நிலையத்தில்  சிறைபிடித்துள்ளனர்.

 கேரளாவை சேர்ந்த சுபைர் மற்றும் அகில் ஆகிய இருவரை விடுவித்தால் மட்டுமே 5 பேரை விடுவிக்க முடியும் என கேரள அதிகாரிகள் தரப்பில்  தெரிவித்துள்ளனர்.

 சட்டவிரோதமாக தமிழக வனத்துறை ஊழியர்கள் சிறைபிடிக்கபட்டுள்ள நிலையில்  வனத்துறையினரை மீட்க கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் கேரளா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.

தமிழக வனத்துறை அதிகாரிகளை கேரளா சிறை பிடித்துள்ளதை கண்டித்து இன்று (27/11/2021) மாலை 7 மணி அளவில் கோவை மலையாள சமாஜத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் தோழமை அமைப்புகள் முற்றுகையிட்டனர்.

 

Tags :

Share via