விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கனிமொழி கருணாநிதிஎம்.பி.யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

by Editor / 27-11-2021 10:58:09pm
விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கனிமொழி கருணாநிதிஎம்.பி.யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன்,மதுரை மண்டல  பொறுப்பாளர் எஸ் எஸ் கே கணேசன்,மாநில செய்தி தொடர்பாளர் மற்றும் ஈரோடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளருமான கந்தவேல் ஆகியோருடன்.

     தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மனாபன்,சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி,உள்ளிட்டவர்கள்   மாநில மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியை   சந்தித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்து விசைத்தறி நலிவடைந்து இருப்பது பற்றியும் நூல் விலை பன்மடங்கு உயர்ந்து இருப்பது பற்றியும், தரம் பிரிப்பதில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் பற்றியும், நூல் விலை கட்டுப்பாடு அவசியம் என்பதையும் அதே போல உதய் மின் திட்டத்தால் விசைத்தறி மிகவும் பாதிக்கப்படும் என்பதையும்எடுத்து கூறினர்.
    
     மனுவைப் பெற்றுக் கொண்ட  கனிமொழி கருணாநிதி  இது சம்பந்தமாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் பேசி இருப்பதாகவும்,  திரும்பவும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வைத்திருக்கிற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தர நாடாளுமன்றத்தில் பேசுவதோடு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கவனத்திற்கு  கோரிக்கைகளை எடுத்து சொல்வதாகவும், உறுதி அளித்துள்ளார்கள்.
        ஏற்கனவே நூல் விலை ஏற்றம் குறித்து தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்திருப்பதாகவும் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

     தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி பற்றியும் அவர்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றியும் நூல் விலையை கட்டுப்படுத்துவது சம்பந்தமாகவும் பேசுவதாக கனிமொழி கருணாநிதி உறுதியளித்துள்ளாராம். 


 

விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கனிமொழி கருணாநிதிஎம்.பி.யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
 

Tags :

Share via