செய்தி மக்கள் தொடர்புத்துறை 6 மண்டலங்களாக பிரிப்பு.

by Editor / 11-12-2021 12:09:44pm
செய்தி மக்கள் தொடர்புத்துறை 6 மண்டலங்களாக பிரிப்பு.

செய்தி மக்கள் தொடர்புத்துறை நிர்வாக வசதிக்காக  சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி என 6 மண்டலங்களாக பிரிப்பு.சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஆகிய 8 மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், ஆகிய 7 மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர் மருதப் பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு இணை இயக்குனர் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.


 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஆகிய 5 மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர் கிரிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்,


 மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய ஆகிய மாவட்டங்களுக்கு இணை இயக்குனர் பழனியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ஆகிய 5 மாவட்டங்களுக்கு இணை இயக்குனர்அண்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via