திருச்செந்தூர்-பாலக்காடு இடையே முன்பதிவில்லாத ரயில் நாளைமுதல் இயக்கம்

by Editor / 15-12-2021 06:13:49pm
திருச்செந்தூர்-பாலக்காடு இடையே முன்பதிவில்லாத ரயில் நாளைமுதல் இயக்கம்

திருச்செந்தூர் - பாலக்காடு-திருச்செந்தூர்  ரயில் நிலையங்களுக்கு இடையே டிசம்பர் 16 முதல் முன்பதிவு இல்லாத விரைவு ரயில் இயக்கம் 

திருச்செந்தூர் - பாலக்காடு வண்டி எண் 16732 முன்பதிவில்லாத விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் திருச்செந்தூரிலிருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு பாலக்காடு சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16731 பாலக்காடு - திருச்செந்தூர் முன்பதிவில்லாத விரைவு ரயில் டிசம்பர் 17 முதல் பாலக்காட்டில் இருந்து அதிகாலை 04.55 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேரும். இந்த ரயில்கள் பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடா, மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி, தாழையூத்து திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, நாசரேத் கச்சினாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

Tags :

Share via