11-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. இறுதிப் போட்டியில், உத்தரப்பிரதேசம் அணி வெற்றி

by Admin / 26-12-2021 12:32:05am
 11-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. இறுதிப் போட்டியில், உத்தரப்பிரதேசம் அணி வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல் வெளி மைதானத்தில், 11-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. இறுதிப் போட்டியில், உத்தரப்பிரதேசம் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.

விழாவில் களரி, மால்கம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் சிலம்பம், கரகாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன.

மாலை 7 மணிக்கு தொடங்கிய இறுதி ஆட்டத்தில் உத்தரப்பிரதேசம் ஹாக்கி அணியும், ஹாக்கி சண்டிகர் அணியும் மோதின. இதில், 3 - 1 என்ற கோல் கணக்கில் உத்தரப்பிரதேசம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. முன்னதாக மாலை 3.30 மணிக்கு 3 மற்றும் 4-வது இடங்களுக்கான போட்டி நடந்தது. இதில், ஹாக்கி அசோசியேஷன் ஆப் ஒடிசா அணியும், ஹாக்கி ஹரியானா அணியும் மோதின. இதில் 3 - 2 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணி வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தனர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி, அமைச்சர் கீதா ஜீவன் (சமூக நலன் - மகளிர் உரிமை துறை), போலா நாத் சிங், (துணைத் தலைவர் - ஹாக்கி இந்தியா) அவர்கள் மற்றும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (சுற்றுசூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை) ஆகியோர் வெற்றி பெற்ற உத்தரப்பிரதேசம் ஹாக்கி அணிக்கு பரிசுக் கோப்பை வழஙகினார், 2-வது - ஹாக்கி சண்டிகர் மற்றும் 3-வது - ஹாக்கி அசோசியேஷன் ஆப் ஒடிசா இடங்களைப் பிடித்த அணிகளுக்கும் பரிசுக் கோப்பைகளை வழங்கினார்.

விழாவில் தலைமை விருந்தினர் -  சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்). விழாவில் கௌரவ விருந்தினர்கள் - தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உறுப்பினர் செயலாளர் ஆனந்தகுமார், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் (காங்கிரஸ்), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் கே.ஆர்.அருணாசலம் மற்றும் கேரள ஹாக்கி தலைவர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via