, கூட்டமாக இறந்து கிடந்த மயில்களால் பரபரப்பு

by Admin / 26-12-2021 02:25:17pm
, கூட்டமாக இறந்து கிடந்த மயில்களால் பரபரப்பு

விவசாய மகசூல் சேதாரத்தை தவிர்க்க, எலிகளுக்கு வைத்த வி‌ஷ தானியங்களை மயில்கள் சாப்பிட்டதால் மயில்கள் இறந்தனவா? அல்லது மயில்களின் இரைகளில் வி‌ஷம் கலந்து வைக்கப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள மாராடி ஊராட்சியிலிருந்து கட்டப்பள்ளி செல்லும் சாலையோரத்தில் மயில்கள் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.
 
குறிப்பாக கட்டப்பள்ளி செல்லும் சாலையோரங்கள், அய்யாற்றின் நீரோட்டங்கள், கரையோரங்கள், வயல்வெளிகளில் மயில்கள் இறந்து கிடந்ததாக வந்த புகாரின் பேரில், மாராடி கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா வனத்துறைக்கு தகவலளித்தார்.

தகவலின் பேரில், துறையூர் கோட்ட வனச்சரகர் பொறுப்பு முருகேசன் தலைமையில், வனவர் ஹயாஸ், வனக்காப்பாளர் ராஜாஜி, இந்திய வன விலங்கு நல வாரிய மாவட்ட அலுவலர் சோபனபுரம் இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆங்காங்கே அழுகிய நிலையில் மயில் உடல்கள், நாய்களுக்கு இரையாகி சிதறிக்கிடந்த மயிலிறகுகள் பார்ப்போரை பதற வைத்தன. இப்பகுதியில் விவசாய மகசூல் சேதாரத்தை தவிர்க்க, எலிகளுக்கு வைத்த வி‌ஷ தானியங்களை மயில்கள் சாப்பிட்டதால் மயில்கள் இறந்தனவா? அல்லது மயில்களின் இரைகளில் வி‌ஷம் கலந்து வைக்கப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இறந்த மயில்களின் உடல்கள் கூறாய்விற்காக வனத்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மயில்களின் உடல்கள் காணப்பட்டு, அழுகிய நிலையிலிருந்த உடல்கள் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன. கூட்டம் கூட்டமாக மயில்கள் இறந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 

Tags :

Share via