மாணவிகளை செல்போனில் படம் பிடித்த இளைஞர்கள்...

by Admin / 29-12-2021 01:19:02pm
மாணவிகளை செல்போனில் படம் பிடித்த இளைஞர்கள்...

திருவண்ணாமலை அடுத்த கீழ்நாச்சிபட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 68 மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். 

இந்த பள்ளியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்கி படிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23 ஆம் பிற்பகல் தேதி 3.45 மணி அளவில் 10 ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேர் இயற்கை உபாதைக்காக பள்ளி கழிவறைக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் கழிவறையில் உள்ள சிமெண்ட் ஜன்னல்களில் உள்ள துளைகளை பயன்படுத்தி அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் வினோத், திருமலை, சுதேஷ், கமலக்கண்ணன் ஆகிய 4 மாணவர்களும் பள்ளி கழிவறையில் மாணவிகள் இயற்கை உபாதை கழிக்கும் போது செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த மாணவி உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் முத்து சரவணனிடம் புகார் அளித்துள்ளார்.
 
விரைந்து வந்த தலைமையாசிரியர் முத்துசரவணன் பள்ளி கழிவறையின் பின்புறம் ஒட்டி உள்ள புதரில் மறைந்திருந்த வினோத் திருமலை சுதேஷ் கமலக்கண்ணன் ஆகிய நான்கு இளைஞர்களையும் பிடிக்க முயன்று போது அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று வெறையூர் காவல் துறையினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் புகார் கூறப்பட்ட 4 இளைஞர்களே நேரில் அழைத்து பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர்.

இதில்  இவர்கள் நான்கு பேரையும் வெறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இயற்கை உபாதைக்கு கழிவறைக்கு சென்ற மாணவிகளுக்கு செல்போனில் மறைந்திருந்த இளைஞர்கள் படம் எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 

Tags :

Share via