தஞ்சாவூரில் 43 ஆயிரம்பேருக்கு 237 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குக்கிறார்.

by Editor / 30-12-2021 01:15:30pm
தஞ்சாவூரில்  43 ஆயிரம்பேருக்கு 237 கோடி ரூபாய்  நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குக்கிறார்.

 தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர்  மு.க .ஸ்டாலின் பங்கேற்று 43 ஆயிரம் பயனாளிகளுக்கு 237 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தஞ்சை அரசு மன்னர் சரபோஜி கல்லூரியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.3 ஆயிரத்து 200 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மேலும் 98 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் இரண்டாம் உலக போர் நினைவுச் சின்னமான மணிக்கூண்டு உடன் கூடிய ராஜப்பா பூங்கா மற்றும் கீழவாசல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சரபோஜி மார்க்கெட் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கவுள்ளார்.

 

Tags :

Share via