மீன்பிடித் துறைமுகத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

by Staff / 16-12-2022 05:03:44pm
மீன்பிடித் துறைமுகத்தில் எஸ்பி திடீர் ஆய்வு

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதனால் நாள் ஒன்றுக்கு கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மீனவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரடியாக விசைப்படகு மீன்பிடி துறைமுகம் சென்று மீன்வள துறை அதிகாரிகள் மற்றும் விசைப்படகு மீனவர்களிடம் மீன்பிடி துறைமுகத்தில் கஞ்சா புழக்கத்தை தடை செய்வது குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

மீன்பிடி துறைமுகத்தில் வெளிநபர் நடமாட்டம் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் மீனவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது அவ்வாறு மீன்பிடி துறைமுகத்தில் கஞ்சா விற்பனை செய்தாலோ அவர்களுக்கு மீனவர்கள் துணை போனாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

 

Tags :

Share via