ஆந்திர முதல்வர் இன்று டெல்லி பயணம்
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மீண்டும் டெல்லி செல்கிறார். இதன் ஒரு பகுதியாக முதல்வர் ஜெகன் புதன்கிழமை மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார். மேலும், மத்திய அமைச்சர்கள் பலரையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. ஆனால் கடந்த 17ஆம் தேதி ஆந்திர முதல்வர் பிரதமரை சந்தித்திருந்த நிலையில், இரண்டு வாரங்களுக்குள், முதல்வரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நேற்று விசாகப்பட்டினத்தில் ஜி20 மாநாடு கோலாகலமாக தொடங்கியது. "ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரு எதிர்காலம்" என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 பிரதிநிதிகளை கலந்துகொண்டனர்.
Tags :