அமாவாசையில் முன்னோருக்கு தர்பணம் ஏன் செய்யவேண்டும்?

by 1tamilnews Team / 02-01-2022 10:02:43am
அமாவாசையில் முன்னோருக்கு தர்பணம் ஏன் செய்யவேண்டும்?

பித்ரு தர்பணம் என்பது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடனாகும்.


நம்மை பெற்று வளர்த்தவர்களுக்கும்..அவர்களது முன்னோர்களுக்கும் அவர்களது எச்சமாக வாழும்
நாம் அவர்களை நினைவு  கூர்ந்து செய்யும் கடமையாகும் அமாவாசை தினத்தில்  கர்ப்பத்தில்,பாதி
வாழ்க்கையில்,முற்றும்  முழுதாக வாழ்ந்து மரணித்தவர்கள் என்று நம் தாயாதியர்கள் வம்சத்தில்
பிறப்பு எடுத்த அனைவரும் உலாவருவர் என்றும் அவர்களுக்கு அன்றைய தினம் தர்ப்பணம் எனும்
பிண்டம் வைத்தால் அவர்கள் மகிழ்ச்சியாக உண்டு செல்வர் என்றும் இனி உள்ள நம் சந்ததிகளை
நல்லவிதமாக வாழ ஆசி வழங்குவார்கள் என்றும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.
இந்த தர்பணம் பற்றி சமஸ்கிருத சுலோகம் சொல்கிறது....


1)என் தாய் தந்தையின் வம்சத்தில் பிறப்பு எடுத்தவர்கள்-கடந்த பிறவிகளில் என் பணியாளர்களாகச்
சேவை புரிந்தவர்கள்,என் பாதுகாப்பில் இருந்தவர்கள் என அனைவருக்கும் என்நண்பர்கள்-பங்காளிகள்
உயிர் வாழ்வதற்காக என்னை வாழ வைத்த செடி,கொடிகள்,உயிரனங்கள் எனக்கு நேரடியாக அல்லது
மறைமுகமாகத் துணையாக கடந்த பிறவிகளில் என் ப்காளிகளாக இருந்த இந்த உலகிலுள்ள
அனைவருக்கும் நான் இந்த பிண்டம்,நீர்,பூ,மற்றும் வேண்டுதல் சமர்பணம் செய்கறேன்.

 

2) என் தாய்,தந்தையர் குலத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள்,குருக்கள்,சொந்தங்கள்மருமக்கள் ஆகியோரின்
 குலத்தில் பிறந்து மறைந்த முன்னோர்களுக்காகவும் இதற்குமுன் செய்த பித்ரு தர்பணத்தில் பிண்டம்
கிடைக்காதவர்களுக்கும் அனாதைகளுக்கும்பற்பல காரணங்களால் பிறருக் நன்மை செய்ய இயலாமல்
 போனவர்களுக்காகவும் தரித்திரத்தில் பிறப்பும் இறப்பும் நிகழ்ந்தவர்களுக்கும் மிலேச்சர்களுக்கும் அகால மரணமடைந்தவர்கள்,கர்ப்பத்தில் இறந்தே  பிறந்தவர்கள் பிறந்து இறந்தவர்கள் ஆகிய அனைவருக்கும்
வேண்டுதலும் பிண்டமும் நீரூம் எள்ளும் சமர்ப்பணமாக அளிக்கிறேன்.


மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து மறைந்தவர்களுக்கும் நான் இதை  சமர்ப்பணம் செய்கிறேன்
ஏழு கண்டங்களிலும் காலகாலமாக வாழ்ந்த...வாழ்ந்து வந்த அனைவருக்கும் அவர்கள் ஆன்மா சந்தோஷமாகவும் நிம்மதியாகவும வாழ்வதற்கு நான் இந்த பிண்டமும் நீரும் தர்ப்பணம் செய்கறேன்.

 

Tags :

Share via