ஒரு கல் குழந்தையுடன் வாழ்ந்து வந்த முதியவர்: அதிர்ந்துபோன மருத்துவர்கள்!

by Admin / 02-01-2022 05:07:08pm
ஒரு கல் குழந்தையுடன் வாழ்ந்து வந்த முதியவர்: அதிர்ந்துபோன மருத்துவர்கள்!


மூதாட்டி ஒருவர் சுமார் 35 ஆண்டுகளாக வயிற்றில் ஒரு கல் குழந்தையுடன் வாழ்ந்து வந்த சம்பவம் மக்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அல்ஜீனியாவின் ஸ்கிக்டா பகுதியை சேர்ந்த 73  வயதான மூதாட்டி ஒருவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. 

இதனால் அந்த முதியவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சோதனை செய்துள்ளார். அப்போது அவரின் வயிற்றில குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது. 
 
இந்த முதியவர் இளம் பெண்ணாக  இருந்தபோது அவருக்கு வயிற்றில் குழந்தை உருவாகியுள்ளது. அந்த குழந்தை தான் இப்போது கல்லாக மாறி உள்ளது என மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக வயிற்றில், கல் குழந்தையுடன் இந்த மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார். கிட்டத்தட்ட இந்த கல் 2 கிலோ வரை இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இது மாதிரியான கருவை மருத்துவ உலகில் லித்தோபிடியன் என்று கூறுவதாகவும், இந்த கரு கரு முட்டையில் உருவாகாமல் அடிவயிற்றில் உருவானால் இதை லித்தோபிடியன் என அழைப்பதாகவும் கூறப்படுகிறது. 

இப்படி சாதாரணமாக எல்லோருக்கும் கரு உருவாக வாய்ப்புள்ளது என்றும் ஆனால் அவ்வாறு உருவாகும் கரு இரண்டு மூன்று நாட்களில் தானாக வெளியேறிவிடும் என்றும் கூறுகின்றனர். 

இந்த மூதாட்டிக்கு மூதாட்டியின் வயிற்றுக்குள் சென்ற கரு , அங்கிருந்து வெளியேற முடியாமல் கல்லாக வளர்ச்சியடைந்துள்ளது என்றும்  ஆனால் அந்த  கல் முதியவருக்கு உடலில் வேறு எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via