விழுப்புரம் தேசீய நெடுஞ்சாலையில் பாம்பை கண்டு அச்சத்தில் பேருந்து மீது ஆட்டோ மோதல் ஓட்டுநர் பரிதாப பலி

by Editor / 04-01-2022 08:26:14pm
விழுப்புரம்  தேசீய நெடுஞ்சாலையில்  பாம்பை கண்டு அச்சத்தில் பேருந்து மீது  ஆட்டோ  மோதல் ஓட்டுநர் பரிதாப பலி


விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும்  ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன.இந்த சாலை  தேசிய நெடுஞ்சாலை என்பதால், இருபுறமும் காடுகளும், விவசாய நிலங்களும் நிறைந்துள்ளன. இந்த சாலைகளில் மக்கள் நடமாட்டமில்லாமல்  இருக்கும் தேசீய நெடுஞ்சலை என்பதால் அனைத்துவகை வாகனங்களும் மின்னல்  வேகத்தில் செல்வது வழக்கமான சம்பவம்.இந்த சாலையில் மனிதனுக்கோ..உயிரினங்களுக்கோ கரணம்  தப்பினால் மரணம்தான் என்பது எழுத்தப்படாதவிதி. 

 இன்று காலைவேளையில் விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையான  இந்த சாலையில் வாகனங்கள் இருபக்கமும் சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு ஓரத்தில் இருந்து சுமார் 10அடி நீளமுள்ள  பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே வந்தது.இதனை வந்தவழியே வந்த ஆட்டோவை ஓட்டிவந்த  ஓட்டுநர்  பாம்பு சாலையின் குறுக்கே செல்வதைக் கண்டு பாம்பை காப்பற்ற முயன்ற நிலையில் நிலைத்தடுமாறி அச்சத்தில் தேசிய நெடுஞ்சாலை என்பதால் எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோ சுக்குநூறாகிப் போனது. ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.சாலையின் குறுக்கே பாம்பு சென்றதால் அச்சத்தில் கவனம் சிதறிய ஆட்டோ ஓட்டுநர் விபத்தில் உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via