தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவக்கம்.ஆளுநர் என்‌.ஆர்.ரவி உரை

by Editor / 05-01-2022 01:50:49pm
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் துவக்கம்.ஆளுநர் என்‌.ஆர்.ரவி உரை

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

 முதல் மொழியாக தமிழும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து இருக்கும் - 
 இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது

 தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது -


150 ஏக்கர் பரப்பளவில் ஒரகடத்தில் மருத்துவ பூங்கா

 தூத்துக்குடியில் 1,100 ஏக்கரில் ஃபர்னிச்சர் பூங்காவை முதல்வர் தொடங்கி வைப்பார்

இதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் - 

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது

பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ₨2 கோடி ஊக்கத்தொகை, அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது -

ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்” -

உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை காப்பதில் தமிழக அரசு உறுதிபட உள்ளது.

மிக விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவப்புரம், நூலகங்கள் மேம்படுத்தப்படும்.

500 கோடி ரூபாயில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்படும்.

10 வருடத்தில் தமிழ்நாடு குடிசை இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில அரசின் பாடலாக அறிவித்து அரசு நிகழ்ச்சிகள், கல்வி நிலையங்களில் பாடப்படுகிறது; தனியார் நிகழ்ச்சிகளிலும் பாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

உயர்க்கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும் - 
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டது.

 மழை, வெள்ள பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.6230 கோடி நிதி மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 25,345 அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்படும்.

நுழைவுத் தேர்வுகள் கிராம மாணவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்துகிறது.

நீட் போன்ற நுழைவு தேர்வுகள் உயர்கல்விக்கு தேவை இல்லை என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.

நீட் தேர்வு தேவையில்லை  என்ற நிலையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது- 

 

Tags :

Share via