கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவினை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு

by Writer / 07-01-2022 11:47:07am
கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவினை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவினை எதிர்த்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டாக குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. இதில் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என். ரவி உரையாற்றினார். ஆளுநர் உரை நிறைவு பெற்ற பிறகு அலுவல் கூட்டம் நடைபெற்று, சட்டசபை ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அத்துடன் பேரவை விதி எண் 110 கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவித்தார்.

மூன்றாவது நாளான இன்று கேள்வி பதில் நேரத்துடன் தொடங்கியது . எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன்பின்னர் கூட்டுறவு சங்கங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார். நகராட்சி சட்டங்கள் திருத்த சட்ட முன்வடிவை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்தார். பல்வேறு சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை குறைக்கும் கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவினை எதிர்த்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டாக குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

Tags :

Share via