5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

by Editor / 07-05-2021 12:57:54pm
5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்..!

முதல்வர் இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் முதல் கையெழுத்து கொரோனா நிவாரணமாக ரூபாய் 4000 வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.

இதனைத்தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு அளிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் 5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டர். அதில்,

முதல் கையெழுத்து கொரோனா நிவாரணமாக ரூபாய் 4000 வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2000 ரூபாய் இம்மாதம் வழங்கப்படும்.

அடுத்து, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு எனவும் இது வருகின்ற 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3-வது கோப்பில் அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4-வது கோப்பில் கொரனோ பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் அதன் கட்டணம் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். 5-வது கோப்பில் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வுகாண 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories