அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்..? அதிகாரிகள் - அவசர ஆலோசனை

by Editor / 11-01-2022 01:11:34pm
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம்..? அதிகாரிகள் - அவசர ஆலோசனை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த அலங்காநல்லூர் விழா குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இன்று மதியம் 2 மணி அளவில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் போட்டி தேதி மாற்றம் குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடைபெற உள்ளது.விழாக் குழுவை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியருடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.*ஜல்லிகட்டு தேதி மாற்றம் அல்லது விலக்கு குறித்து ஆட்சியர் அறிவிக்க உள்ளதாக தகவல்.


 

 

Tags :

Share via