10 நாட்களில் கதை, திரைக்கதை, இயக்கம் |ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

by Editor / 25-01-2022 12:01:26am
10 நாட்களில் கதை, திரைக்கதை, இயக்கம் |ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

தொழில்நுட்பம் நிகழ்த்தும் மகா மாயாஜாலம் திரைப்படம். அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் தலைமை வித்தைக்காரர்கள் கதை, திரைக்கதை, இயக்கம் துறையைச் சேர்ந்தவர்கள் தான். மற்ற துறை சார்ந்தவர்கள், படைத்தளபதிகள், படை வீரர்கள்.

கதை, திரைக்கதை இயக்கம்... வித்தைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் ஸ்டைலில் மாயாஜாலம் நிகழ்த்தி, அந்த மாயாஜாலத்தை திரையில் காணும் பெருங்கனவோடு இருப்பவர்களுக்கு சிறு உதவி செய்யவே இந்த ஆன்லைன் வகுப்பு.

பத்தே நாட்களில் கதை, திரைக்கதை குறித்து ஆழமான புரிதலைப்பெற ஒரு அற்புதமான வாய்ப்பு. அதுவும் மிகக் குறைந்த கட்டணத்தில். 

இந்த பயிற்சியில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும், திரைத்துறை சார்ந்து தொடர்ந்து இயங்கி வருபவர்களும் சிறப்பு உரையாளர்களாக கலந்துகொள்ள இசைந்திருக்கிறார்கள்.

சிறப்பு உரையாளர்கள்:

நடிகரும் ஒளிப்பதிவாளருமான அருள்தாஸ் அவர்கள், இயக்குநரும் நடிகருமான விருமாண்டி அவர்கள், இயக்குநர், எழுத்தாளர் விகே வெங்கடேஸ்வரன் அவர்கள், எழுத்தாளர், திரை விமர்சகர் ம.தொல்காப்பியன் அவர்கள், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் அவர்கள், தயாரிப்பாளர், இயக்குநர் கஸாலி அவர்கள், இயக்குநர், திரை எழுத்தாளர் மதியழகன் சுப்பையா அவர்கள், எழுத்தாளர், புகைப்படக் கலைஞர் பிரபு தர்மராஜ் அவர்கள், நடிகர் இயக்குநர், காதல் சுகுமார் அவர்கள் உள்பட பல திரை ஆளுமைகள் பயிற்சியாளர்களோடு உரையாட மகிழ்வோடு இசைந்திருக்கிறார்கள்.

பாடலாசிரியர், வசனகர்த்தா, திரை எழுத்தாளர் முருகன் மந்திரம் ஒருங்கிணைப்பில் நடக்கிறது இந்த பயிற்சி வகுப்பு. 

வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் 10 நாட்களில் பாடலாசிரியர் மெட்டுக்கு பாட்டெழுத கற்றுக்கொள்ளும் பயிற்சியியைத் தொடர்ந்து 10 நாட்களில் கதை, திரைக்கதை, இயக்கம் பயிற்சி தொடங்கப்படுகிறது.

கதை, திரைக்கதை "முதல் பேட்ஜ்* வகுப்பு ஜனவரி 28 முதல் தொடங்குகிறது.

 

 

முன்பதிவு & மேலும் விவரங்களுக்கு:
00 91 98418 69379
00 91 95000 59379
 

 

Tags :

Share via