மணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்

by Admin / 25-01-2022 12:19:54am
மணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்


முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி உதவியாளரான மணி  பணம் , வாங்கி வேலைகொடுக்காமல், மோசடி செய்துவிட்டதாக சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையிடம் தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார்.  பணம் அனுப்பிய ஆவணங்களையும்அளித்திருந்தார்.

  மணிமீது  மேலும் சிலர்.  போலீசில் புகார் அளித்திருந்ததையடுத்து .  வழக்குப் பதிவு செய்யப்பட்டயடுத்து, தலைமறைவான மணியை  சேலம் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ,சென்னை உயர் நீதிமன்றத்தில் மணி ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த மனுவில் தன் மீதான புகார்,  பொய் புகார் என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும்நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது .  தமிழக அரசு  மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் மோசடி  செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இரு வாதங்களை கேட்ட நீதிபதி,மணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். 

 

Tags :

Share via