வேட்பு மனு தாக்கல் தேவையான ஆவணங்கள் :கவனிக்க வேண்டிய விசயங்கள்.

by Editor / 27-01-2022 11:46:00pm
வேட்பு மனு தாக்கல் தேவையான ஆவணங்கள் :கவனிக்க வேண்டிய விசயங்கள்.

கவனிக்க வேண்டிய விசயங்கள்.

உள்ளாட்சி வாக்களர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே போட்டியிட இயலும் 

வேட்பாளரின் பெயரை  உள்ளாட்சி வாக்களர் பட்டியலில் உள்ள பாகம் எண் வரிசை எண்ணை சரி பார்த்துக் கொண்டு அதை வேட்புமனுவில் உரிய இடத்தில் குறிப்பிட வேண்டும். 

இனையத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் ஆகியவை எதுவும்  உள்ளாட்சி தேர்தலுக்கு பொறுந்தவே பொறுந்தாது. 

முன்மொழிபவரின் பெயர்  பாகம் எண் வரிசை  எண் ஆகிய விபரத்தை ள்ளாட்சி வாக்களர் பட்டியலில்   சரி பார்த்துக் கொண்டு அதை வேட்புமனுவில் உரிய இடத்தில் கவனமாக பிழையின்றி  குறிப்பிட வேண்டும். 

வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பு மனுவுடன் இணைத்து அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் 

மாதிரி அபிடவிட் தேர்தல் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம் (தேர்தல் ஆணையம் மாதிரியை இதுவரை  இனையத்தில் அல்லது வேறுவகையில்  பொதுமக்கள் பார்வைக்கு  வெளியிடவில்லை) 

அபிடவிட் பூர்த்தி செய்யும் போது கவணமாக பூர்த்தி செய்ய வேண்டும் 
அதில் 
சொத்து  மதிப்பு விபரம்
கடன்  பற்றிய விபரம்
வங்கி கணக்கில் உள்ள தொகை பற்றிய விபரம் 
(வேட்பாளர் மற்றும் அவரின் வாழ்க்கை துணை குடும்ப உறுபினர்களின் சொத்து  மதிப்பு விபரம்  கடன்  பற்றிய விபரம்
வங்கி கணக்கில் உள்ள தொகை பற்றிய விபரம்)

வழக்கு விபரம் முழுமையாக தெரிவிக்க வேண்டும் 
(தோரயமாக சொத்து கடன் பற்றி சொன்னால் போதும் வருமான வரி விபரங்கள் இருந்தால் இருப்பதை மட்டும் தெரிவித்தால் போதும்)

கட்டாயம் அணைத்துக் காலங்களும் பூர்த்தி செய்ய வேண்டும் காலியாவோ ---- ஆகவே விட கூடாது ஆம் இல்லை என்று முழுமையாக எழுத வேண்டும்

அணைத்து பக்கங்களிலும் கட்டாயம் கையொப்பம் செய்ய வேண்டும்

நோட்டரி வழக்கறிஞர் சான்று கட்டாயம் பெற வேண்டும். 

வேட்பாளர் முன்மொழிபவர் ஆகியோரின் வாக்காளர் அடையாள அட்டை ஜெராக்ஸ் நகல் வேட்புமனுவுடன் தாக்கல் செய்ய சில அலுவலர்கள்  கேட்பார்கள் 

போட்டியிடும் பதவி SC ST  இடஒதுக்கீட்டில் வந்தால் மட்டும் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டும். பொது போட்டி பதவிக்கு சாதி சான்று தேவையில்லை 

உள்ளாட்சி தேர்தல் ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட இயலும்

ஒன்றிற்கு மேற்பட்ட பதவியிடங்களில் போட்டியிட தடை 
ஆனால்  பல பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஆநால் வேட்பு மனுவை உரிய காலத்தில்  திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் .

உள்ளாட்சியில் நிலுவை இல்லா சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் வீட்டு வரி குடி நீர் வரி உள்ளிட்ட உள்ளாட்சிக்கு கட்ட வேண்டிய நிலுவை தொகை பாக்கி இல்லை என்று சான்று அவசியம் தேவை மற்ற பாக்கிகள் பற்றி வேட்பாளர்கள் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை
(அதே போல முன்மொழிபவர்களுக்கும் நிலுவையின்மை சான்றிதழ் சில தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்கின்றார்கள்)

நிலுவையின்மை சான்றிதழ் வேட்பாளர் வசிக்கும் உள்ளாட்சியில் பெற வேண்டும் 

மாநகராட்சி, நகராட்சி  பேரூராட்சி எனில்  அதன் அலுவலகத்தில் ரூ 20 விண்ணப்பகட்டணம் செலுத்தி ரூ 3 கோர்ட்டு ஸ்டாம்ப் ஒட்டி விண்ணப்பம் செய்தால்  உடனடியாக நிலுவையின்மை சான்று வழங்குவார்கள்

வேட்பாளர் அவரின் குடும்பத்தினருக்கு   வருமான வரி நிரந்திர கணக்கு எண்  இருந்தால் அதன் விபரமும் கடைசியாக வருமான வரி கட்டிய விபரமும் அபிடவிட்டில் குறிப்பிட வேண்டும். 

இல்லையென்றால் இல்லை என்று குறிபிட்டால் போதும்  கடைசியாக வருமான வரி கட்டிய  போது அதில் காட்டியுள்ள மொத்த வருமான விபரம் சொன்னால் போதும் தேர்தலுக்காக வருமான வரியை கட்டி அந்த ஆதாரம் எல்லாம் கொடுக்க தேவையில்லை 

வேட்பாளர் மீது வழக்குகள் இருந்தால்  மட்டும் அதன் விபரம் கவணமாக வழங்க வேண்டும் 

சிவில் வழக்கு தீர்ப்பில் குற்றசாட்டில் இருந்து விடுதலையான வழக்கு விபரம் சொல்ல தேவையில்லை 
இராண்டுகள் அதற்கும் மேல் தண்டனை தர கூடிய வழக்கு வேட்பாளருக்கு எதிராக பதிய பட்டு நிலுவையில் இருந்தாம் தண்டனை வழங்கப்பட்டு மேல் முறையீடு நிலுவையில் இருந்தால் மட்டும் அதன் விபரம் கட்டாயம் வழங்க வேண்டும்   

வேட்பாளர் அவரின் குடும்பத்தினரின் அசையும் அசையா சொத்து விபரம் குறிப்பிட வேண்டும் 

கையிருப்பு ரொகம் நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள் பற்றிய விபரம் தோராயமாக குறிப்பிடாலம்

அசையா சொத்து பற்றிய விபரம் சரியாக தெளிவாக குறிப்பிட வேண்டும் 
குடும்ப சொத்து தனி சொத்து வீடு நிலம் பிளாட் ஆகியவறின் சர்வே எண் சந்தை மதிப்பு வாங்கிய மதிப்பு ஆகியவை குறிப்பிட வேண்டும் 

கல்வி தகுதி பற்றிய விபரம் படித்த படிப்பு வருடம் கல்வி நிறுவனம் ஆகிய விபரம் அளித்தால் போதும் ஆதாரம் இணைக்க தேவையில்லை

பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுவுடன்  இணைக்க வேண்டியவை

1. அபிடவிட்
2. உள்ளாட்சிக்கு செலுத்த வேண்டிய பாக்கி இல்லை என்பதற்க்கான  நிலுவையின்மை  சான்றிதழ்
3. வாக்காளர் அடையாளர் அட்டை ஜெராக்ஸ்  (வேட்பாளர் மற்றும் முன் மொழிபவர்)
4. ஆதார் அட்டை 
5. வாக்காளர் பட்டியல் (வேட்பாளர் மற்றும் முன் மொழிபவர் பெயர் உள்ள பக்கம்)
6. சாதி சான்றிதழ் (ரிசர்வ் தொகுதிக்கு மட்டும்)
7. பொது விபரம் படிவம் 
8. கட்சி சின்னம் எனில் படிவம் ஏ.பி.சி.,
மற்றும் உங்கள் தேர்தல் அலுவலர் கேட்கும் விபரங்கள்.


 

 

Tags : Documents required for filing nominations: Things to look out for.

Share via