வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று காலை 10 மணிக்கு பரிசீலனை

by Editor / 05-02-2022 08:48:01am
வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று காலை 10 மணிக்கு பரிசீலனை

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட 12,838 வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட 50 ஆயிரம் பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை 10 மணி முதல் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும்.தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் கடந்த 28ம் தேதி முதல் 4ம் தேதி (நேற்று) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்தான் கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு முடிந்து, வேட்பாளர்களை அறிவித்து வந்தனர். திமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, திமுக, அதிமுக வேட்பாளர்கள் இறுதி நாளான நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டி போட்டு ஒவ்வொரு பகுதியிலும், வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் மனு தாக்கல் செய்தனர். அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது மேள தாளம், கேரள சண்ட மேளம் முழங்க திரண்டு வந்து மனு தாக்கல் செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.வேட்புமனு தாக்கல் செய்த விண்ணப்பங்கள் அனைத்தும் இன்று காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வருகிற 7ம் தேதி (திங்கள்) மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். 7ம் தேதிமாலையே சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். 
 

 

Tags : வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை.

Share via