மேகதாது பகுதியில் கர்நாடக அணை கட்ட முயற்சி செய்தால் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம்- பீட்டர் அல்போன்ஸ்

by Editor / 31-05-2023 10:49:27pm
மேகதாது பகுதியில் கர்நாடக அணை கட்ட முயற்சி செய்தால் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம்- பீட்டர் அல்போன்ஸ்

மேகதாது பகுதியில் கர்நாடக காங்கிரசார் அணை கட்ட முயற்சி செய்தால், தமிழக காங்கிரஸ் கட்சியினர் அதனை கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம் - சிறுபான்மையின ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி.

தென்காசி மாவட்ட முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோ பங்கேற்ற நிலையில், 
ரூபாய் 13.54 லட்சம் மதிப்பில் 149 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளானது வழங்கப்பட்டது.தொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது : -

செங்கோல் என்பது முடியாட்சி தத்துவத்திலான அமைப்பு எனவும், மன்னர் வழிவந்து அரசு ஆள்பவர்களே செங்கோலை பயன்படுத்தினர். ஆனால் குடியாட்சி மூலம் ஆட்சி நடத்தியவர்கள் யாரும் செங்கோலை பயன்படுத்தியது இல்லை. செங்கோல் என்பது வெறும் விளம்பரத்திற்காக பாஜக அரசு ஏற்படுத்திய ஒரு மாயை எனவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடகா காங்கிரஸ் அரசு அணை கட்ட முயற்சி செய்தால் அதை தமிழக காங்கிரஸ் கண்டிப்பாக தடுத்து நிறுத்தும் எனவும், மேகதாது பகுதியில் அணைக்கட்ட தமிழக அரசு அனுமதி மற்றும் ஒன்றிய அரசு அனுமதி கண்டிப்பாக பெறவேண்டும் எனவும் தெரிவித்தார். அதேபோல், தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் எந்த ஒரு செயலையும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள மல்யுத்த வீரர்களின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய அரசு எந்தவிதமான கவனமும் செலுத்தாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும், இதற்கு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேகதாது பகுதியில் கர்நாடக அணை கட்ட முயற்சி செய்தால் கண்டிப்பாக தடுத்து நிறுத்துவோம்- பீட்டர் அல்போன்ஸ்
 

Tags : மேகதாது பகுதியில் கர்நாடக அணை கட்ட முயற்சி

Share via