நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மண்எண்ணெய் பாட்டிலுடன் போராட்டம்

by Editor / 27-07-2021 07:50:25pm
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மண்எண்ணெய் பாட்டிலுடன் போராட்டம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (24) இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுக கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆறுமுக கார்த்தி கடந்த  2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மின் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவருடன் வாழ்ந்தபோது பிறந்த பெண் குழந்தையுடன் இந்துமதி அம்பா சமுத்திரத்தில் உள்ள தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார் 

இந்நிலையில் ஆதரவற்ற இளம் கைம்பெண் என்ற அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணி இவருக்கு வழங்கப்பட்டது இந்த இளம் வயதில் கணவனை இழந்து தவித்து வந்த சூழலில் முகநூல் மூலம் நட்பு அழைப்பு கொடுத்து அம்பாசமுத்திரத்தை அடுத்த ஊர்க்காடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கரன் என்பவர் முகநூல் நண்பராக பழகி வந்துள்ளார் இந்த நிலையில் இருவரும் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறி அது காதலாக மாறி கடந்து 2018 ஆம் ஆண்டு பாஸ்கரனும் இந்துமதியும் திருமணம் செய்து கொண்டனர் அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இவர்களது திருமணத்திற்கு பாஸ்கரன் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்துமதி வீட்டில் பாஸ்கரன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற பாஸ்கரன் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை என இந்துமதி தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  கணவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்து வைக்க புகார் கொடுத்த நிலையில் அம்பாசமுத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து விசாரணை செய்த போது பாஸ்கரன் குடும்பத்தினர் அவரை மறைத்து வைத்துக் கொண்டு நாடகமாடியது தெரியவந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்துமதியுடன் பாஸ்கரன் சேர்ந்து வாழாமல் அவரை ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி பல இடங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் தீ குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தோடு இந்துமதி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது தாயாருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்  பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் வந்த இளம் பெண்ணிடம் இருந்தும் மண்ணெண்ணெய் கேனை மீட்டதுடன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து புகார் மனு அளிக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். காவல்துறையினர் பாதுகாப்புடன் இளம்பெண்ணை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்தனர்

 

Tags :

Share via