தமிழ்ப் புத்தாண்டு வாழ்க, தைப் பொங்கல் வாழ்க....அமைச்சர் பொன்முடி.

by Editor / 15-01-2023 01:05:14pm
தமிழ்ப் புத்தாண்டு வாழ்க, தைப் பொங்கல் வாழ்க....அமைச்சர் பொன்முடி.

விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவும், தைப் பொங்கலை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அவர் வெளியிட்ட அறிவிப்பின் காரணமாகவும், எப்போதும் இல்லாத வகையில் இப்போது தமிழக முழுவதும் தைப் பொங்கல் பண்டிகை மிகவும் எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை தைப் பொங்கலை மிகச் சிறப்பாக கொண்டாட, திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இதில் குறிப்பாக, விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் தமிழ்நாடு வாழ்க என்று இல்லந்தோறும் கோலங்கள் போடப்பட்டுள்ளது. அதற்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தை மாதம் முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து, இன்றைக்கு எல்லா மதத்தினரும் தமிழர்கள் என்ற உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்பதுதான், முதலமைச்சருடைய எண்ணம். அந்த எண்ணம் இன்றைக்கு ஈடேறி இருக்கிறது.தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை, உலகத் தமிழர்கள் இன்றைக்கு மிகச் சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு வாழ்க, தைப்பொங்கல் வாழ்க, வாழ்க என வாழ்த்துகிறேன் என்றார். 

 

Tags :

Share via