2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி

by Admin / 10-02-2022 12:17:17pm
 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதி


உலகளவில் கொரோனா மற்றும் அதன் மாறுபாடான ஒமைக்ரான் உள்ளிட்ட தொற்றுகளின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு பயணிககளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நிலையில், கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது. 

சமீப நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருதால், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கி வருகிறது.
 
அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாடு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. 

பிலிப்பைன்ஸ் வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, நெகட்டிவ் என்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 

பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது..

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு சுற்றுலாத்துறை செயலாளர் பெர்னா ரோகுலோ-புயாட் கூறியதாவது.

கொரோனாவால் கடுமையான பொருளாதார நெருக்கடியை பிலிப்பைன்ஸ் சந்தித்துள்ளது. எல்லையை மீண்டும் திறப்பதன் மூலம் வேலைகளை மீட்டெடுக்கும். சுற்றுலா தொடர்பான நிறுவனங்கள் மற்றும் சமூகங்களில் வருவாயை உருவாக்கும். மீட்சிக்கான பாதையில் அடுத்த அத்தியாயத்தை நாங்கள் தொடங்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo