ரெயிலின் 5 பெட்டிகளில் தீ மதுபானி ரெயில் நிலையத்தில் பரபரப்பு

by Admin / 19-02-2022 12:24:56pm
 ரெயிலின் 5 பெட்டிகளில் தீ  மதுபானி ரெயில் நிலையத்தில் பரபரப்பு

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

ரெயிலின் 5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரியும் வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரெயிலில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிழக்கு மத்திய ரெயில்வேயின் சிபிஆர்ஓ கூறியதாவதுகாலி ரெயிலில் ஏற்பட்ட தீ காலை 9.50 மணியளவில் அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo