மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டப கடைகள் அகற்றம் - வியாபாரிகள் எதிர்ப்பு

by Editor / 21-02-2022 09:55:45am
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டப கடைகள் அகற்றம் - வியாபாரிகள் எதிர்ப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான புது மண்டப வளாகத்தில் செயல்பட்டு வரும் 300க்கும் மேற்பட்ட கடைகளை அருகில் உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடமாற்றம் செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. குன்னத்தூர் சத்திரத்தில் அனைத்து கடைகளுக்கும் இட வசதி மற்றும் மின் வசதி செய்து தராமல் கோவில் நிர்வாகம் கடைகளை அப்புறப்படுத்தி வருகிறது.கோவில் இணை ஆணையர் தலைமையில் காவல்துறை உதவியுடன் வியாபாரிகள் இல்லாமல் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனை காரணமாக அந்தபகுதியில் அதிகளவில் வியாபாரிகள் குவிந்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

 

Tags : Madurai Meenakshi Amman Temple New Hall Shops Removal - Merchants protest

Share via