2007ல் சிவகங்கை நகராட்சி திமுக தலைவர் ரீமோட் வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அனைவரும் விடுதலை.

by Editor / 24-02-2022 12:07:09am
 2007ல் சிவகங்கை நகராட்சி திமுக தலைவர் ரீமோட் வெடிகுண்டு மூலம்  கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அனைவரும் விடுதலை.

 2007ல் சிவகங்கை நகராட்சி திமுக தலைவர் ரீமோட் வெடிகுண்டு மூலம்  கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அனைவரும் விடுதலை.

சிவகங்கையில் 2007ல் நகராட்சி தலைவராக இருந்தவர் முருகன் (தி.மு.க.,). 2007 ஜூன் 29 ல் பஸ் ஸ்டாண்ட் அருகிலிருந்த நகராட்சி அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். மெயின் ரோட்டில் திரும்பும்போது, அவரது கார் மீது ரிமேட் மூலம் இயக்கி  வெடிகுண்டு வெடிக்கபட்டது கார் வெடித்து சிதறியதில்  அப்போதைய நகராட்சி தலைவர் முருகன் பலியானார். அவரது கார் டிரைவர் பாண்டிக்கு இரு காலும் துண்டானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.  இச்சம்பவம் தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த  மணிமுத்து, மந்தக்காளை,  ரீமோட் மூலம் வெடிகுண்டுடை வெடிக்க செய்த பாலா, 

சரவணன், மாமுண்டி(எ) செந்தில், கே.கண்ணன், பாண்டி, பி.கண்ணன், முருகப்பாண்டி, கம்பம் மனோகரன், சென்னை வீரமணி ஆகிய 11 பேர் மீது அப்போதைய டவுன் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்தார். இவ் வழக்கில் அரசு தரப்பு உட்பட 139 பேர் சாட்சிகளாக விசாரித்தனர்.

இந்நிலையில் பல  ஆண்டுகளாக, சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு  விசாரணை நடந்து வந்தது. மேலும் வழக்கு  விசாரணையை விரைந்து  முடிக்க, மதுரை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் உத்தரவு இருந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வழங்க பட்டது  வழக்கின் முக்கிய குற்றவாளி பாலா, மற்றும்  முருகபாண்டி ஆகிய  இரண்டு பேர் உயிர்  இழந்தனர்.வீரமணி என்பவர் வழக்கில் தொடர்பில்லை என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விடுதலை பெற்றார். 15 வருடங்களுக்கு பிறகு எஞ்சிய 8 பேர்க்கு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி சுமதி சாய்பிரியா  தீர்ப்பு வழங்கினார்.சிவகங்கையை சேர்ந்த   மணிமுத்து, (தற்போது திமுக மாவட்ட துணை செயலாளர் மற்றும் காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற  தலைவர் )  மந்தக்காளை, சரவணன், மாமுண்டி(எ) செந்தில், கே.கண்ணன், பாண்டி,  பி.கண்ணன், கம்பம் மனோகரன், ஆகிய 8  பேர் மீதும் குற்றச்சாட்டு நிரூபிக்கபடாதால் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

 2007ல் சிவகங்கை நகராட்சி திமுக தலைவர் ரீமோட் வெடிகுண்டு மூலம்  கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அனைவரும் விடுதலை.
 
Tags : 2007ல் சிவகங்கை நகராட்சி திமுக தலைவர் ரீமோட் வெடிகுண்டு மூலம் கொலை

Share via