கொரோனா 4ஆவது அலை ஜூன் 22ல் தொடங்க வாய்ப்பு.

by Admin / 01-03-2022 01:48:04pm
கொரோனா 4ஆவது அலை ஜூன் 22ல் தொடங்க வாய்ப்பு.

இந்தியாவில் கொரோனா 4ஆவது அலை ஜூன் 22ல் தொடங்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் வருகிற ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது, கொரோனா மூன்றாவது அலை குறைந்து வரும் சூழலில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஜூன் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24ஆம் தேதி வரை கொரோனா நான்காவது அலை பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய வகை கொரோனா மற்றும் தடுப்பூசி போட்டதன் விகிதம் உள்ளிட்டவை அடிப்படையிலேயே, கொரோனா நான்காவது அலையின் தீவிரம் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட அதிக வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 

கான்பூர் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவது முறையாக, கொரோனா அலையின் பாதிப்பை கணித்துள்ளனர். 

 

Tags :

Share via