ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பயணிஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

by Admin / 04-03-2022 05:04:59pm
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பயணிஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

குஜராத் மாநிலம் சூரத் ரயில் நிலையத்தில் வேகமாக சென்ற ரயிலில் இருந்து இறங்கிய பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில் ரயில் நிலையத்திலிருந்து அந்த ரயில் மெதுவாக கிளம்பிய பின்னர் படிப்படியாக வேகம் எடுத்து செல்வது பதிவாகியுள்ளது.

அப்போது அந்த ரயிலில் இருந்த பயணி ஒருவர் இறங்க முற்படுகையில் தவறி விழுந்து இழுத்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டது.

இதை கவனித்த ரயில்வே கார்டு உடனடியாக ரயில் பிரேக் போட்டு நிறுத்தியதால் அந்த இளைஞர் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்

 

Tags :

Share via