வார் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

by Editor / 15-05-2021 10:39:16am
வார் ரூமுக்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னைதேனாம்பேட்டையில் செயல்பட்டுவரும் கொரானாதடுப்புக்கானகட்டளைமையத்தில் (WAR ROOM) நேற்று இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரெனஆய்வுசெய்தார்.

ஆக்சிஜன் படுக்கைகள் நிலவரம், சாதாரண படுக்கைகள் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசால் வார் ரூம் எனப்படும் கட்டளை மையம் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்களின் குறைகளை 104, 108 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அதே போல் ட்விட்டரில் ஹேஷ் டேக் மூலமும் குறைகளை தெரிவிக்கலாம்.

இந்நிலையில்டிஎம்எஸ் வளாகத்தில் செயல்படும் கட்டளை மையத்துக்கு நேற்று இரவு 11 மணியளவில் முதலமைச்சர் வந்தார். அங்குள்ள அதிகாரிகளுடன் மையத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

பொதுமக்களின் அழைப்புக்கு ஊழியர்கள் பதிலளிக்கும் பகுதிக்கு வந்த முதல்வர், ஒரு அழைப்பை தானே பெற்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்று கூறி குறையைக் கேட்டறிந்தார்.

பின்னர், கட்டளை மையத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். முதல்வர் ஆய்வு மேற்கொண்டபோது அவரது செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத் மற்றும் தேசிய மக்கள் நல்வாழ்வு திட்ட இயக்குநர் தாரேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

Tags :

Share via