கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர்  மருந்தை விற்றால் குண்டாஸ் முதல்வர்  மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை 

by Editor / 15-05-2021 04:29:47pm
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர்  மருந்தை விற்றால் குண்டாஸ் முதல்வர்  மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை 



தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முதல்வர்  மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட முழு ஊரடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தற்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சென்னை உள்பட 6 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
சென்னையில்  நேரு விளையாட்டரங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஒருசில இடங்களில் மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் வெளியே கொண்டுச்செல்லப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டாஸ் சட்டம் பாயும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுயுள்ளார். குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் ரெம்டெசிவிர், ஆக்சிஜனை அதிக விலைக்கு விற்பது மிக கடுமையான குற்றமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via