ஹாக்கியில் இடம்பிடித்த ‘பொம்மன்’ லோகோ

by Staff / 10-08-2023 02:07:34pm
ஹாக்கியில் இடம்பிடித்த ‘பொம்மன்’ லோகோ

7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் லோகோவாக 'பொம்மன்' எனும் யானையின் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உதயநிதி இன்று தனது ட்விட்டரில், “முதுமலை புலிகள் காப்பகத்தில் கைவிடப்பட்ட யானைக் குட்டிகளை தத்தெடுத்து பராமரித்து வரும் பொம்மன் - பெல்லி தம்பதியினரை பெருமைப்படுத்தும் விதமாக #AsianChampionshipTrophyChennai ஹாக்கி போட்டிக்கான இலச்சினைக்கு "பொம்மன்" என பெயர் சூட்டினோம். இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியை காண வந்திருந்த பொம்மன் - பெல்லி தம்பதியினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via