கரூர் நாமக்கல் சேலம் தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு.

by Staff / 05-05-2022 03:20:52pm
கரூர் நாமக்கல் சேலம் தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு.

கரூர், நாமக்கல், சேலம், தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கன மழைக்
கு வாய்ப்பு. நீலகிரி கோயம்புத்தூர் திருப்பத்தூர் தேனி திண்டுக்கல் ஈரோடு கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை வாய்ப்பு. வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo