உக்ரைன் 300 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது

by Staff / 29-10-2022 10:15:47am
 உக்ரைன் 300 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது

உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் இதுவரை ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஈரானில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஷாஹெட்-136 காமிகேஸ் டிரோன்களை கீவ் வீழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via