பெண்குழந்தைகளும் ஊட்டச்சத்தும்

by Editor / 13-03-2022 09:00:39pm
பெண்குழந்தைகளும் ஊட்டச்சத்தும்

பெண் குழந்தைகள் பருவமடைவது பற்றியும் அந்த பருவமடையும் காலத்தில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் மிகவும் அவசியம் என்பதை பற்றி பார்க்கலாம்.


 பெண் குழந்தைகள் பருவமடைவது அவர்களது பரம்பரையை பொறுத்து 10 முதல் 16 வயது வரை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். 10 வயதில் உங்கள் பெண் குழந்தைகள் பருவமடைந்தவிட்டால் பெற்றோர் வருத்தப்படத் தேவையில்லை குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து பருவமடைவது குறித்தும் அதன் பின்னர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி புரியவைக்க வேண்டும்.


      உதிரப் போக்கு குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் ஒரு நாப்கினை 6 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்பதை முதலில் நன்கு புரிய வைக்க வேண்டும். உதிரப்போக்கு என்பது மாதந்தோறும் ஏற்படும் ஒரு நிகழ்வு தான் அதோடு நம் எவ்வாறு படிக்க வேண்டும் என்றும் அந்த நாட்களை எவ்வாறு கடந்து செல்ல வேண்டும் என்றும் தெளிவாக விளக்க வேண்டும்.
     

11 வயது முதல் 13 வயது வரையிலான காலகட்டத்தில் பெண்கள் பருவமடைவதற்கு தயாராவார்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் மாற்றமடையும்.உடல் வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.

   இந்த காலகட்டத்தில் 18 வயது வரையும் இவர்கள் அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது அவசியம். குறிப்பாக இரும்பு, புரதம் , மாவுச்சத்துகள் அதிகம் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.

    எள் மற்றும் வெல்லத்தால் செய்த விலை மலிவான எள்ளுருண்டை கொடுக்கலாம். சத்து மாவு மற்றும் பாயாசம் மற்றும் சிறு தானிய சப்பாத்தி போன்றவற்றை குழந்தைகள் விரும்பும் வழிகளில் வழங்கலாம்.

       உளுந்து அதிகம் உள்ள உளுந்து வடை அதிகம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இட்லி மற்றும் தோசை ஆகியவையும் சிறந்த உணவுகள் தான். வேர்க்கடலை வெல்லப்பாகுடன் சேர்ந்து உருண்டையாகவோ பர்பி வடிவிலோ கடலை மிட்டாய் போல கொடுக்கலாம்.

        பெண் குழந்தைகளுக்கு 11 முதல் 18 வயது வரையிலான காலத்தில் உணவில் அதிக அளவு காய்கறிகள், கீரை, பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த உணவு முறைகளைக் கடைப்பிடித்தால் இந்த வளரிளம் காலத்தை கடந்து ஆரோக்கியமான உடல், மன நலனை பெற முடியும்

 

Tags :

Share via