அதிரடி அறிவிப்புக்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

by Editor / 18-03-2022 10:53:56am
அதிரடி அறிவிப்புக்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முழுமையான நிதிநிலை அறிக்கை என்பதால், மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வந்ததை நிறைவு செய்யும் வகையாக இந்த நிதி நிலை அறிக்கை உள்ளது.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காகிதமில்லா நிதிநிலை அறிக்கையாக இதனை அவர் தாக்கல் செய்துள்ளார். திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13 ஆம்தேதி திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தற்போது அவர் இரண்டாவது முறையாக நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துவருகிறார்.
திமுக அரசின் நடவடிக்கை காரணமாக அரசின் வருவாய் பற்றாக்குறை 4.16 விழுக்காட்டிலிருந்து 3.80 விழுக்காடாக குறைந்துள்ளது. இதன் மதிப்பீடு ரூ.7 ஆயிரம் கோடியாகும்.அண்மையில் உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற மாபெரும் வெற்றி, அரசின் நடவடிக்கைக்கு மக்கள் தரும் அங்கீகாரத்தின் பிரதிபலிப்பு என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் போர், கோவிட் பெருந்தொற்று தாக்கம், கடன் தள்ளுபடி, மின் பகிர்மான கழக இழப்பு போன்றவையின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடப்பு பட்ஜெட்டில் அரசு நிதி முன்னுரிமைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன.உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையின் கீழ் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உரிய தீர்வு எட்டப்பட்டுள்ளது.சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தப்பின் மாநில அரசு கடும் நிதி இழப்பை சந்தித்துவருகிறது. ஜிஎஸ்டி வரி மூலம் தமிழ்நாடு அரசு ரூ.20,000 இழப்பை சந்திக்க நேரிடும்.பெரியாரின் சிந்தனைகளை உலகமெங்கும் சென்று சேர்ந்திட, பெரியார் சிந்தனை தொகுப்பு புத்தகம் 21 உலக மொழிகளில் பதிக்கப்பட்டு, வெளியிடப்படும். இந்த புத்தகம் மின் நூல் வடிவிலும் உருவாக்கப்படும்.விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.10 மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் உள்ள அருங்காட்சியகங்களை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு.சென்னை பெருநகரில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ள நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் பேரில் இந்தாண்டு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.நவீன நுட்பத்தில் நிலங்களை அளவிட புதிய ரோவர்களை வாங்கி ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.அரசு நிலங்களை பரிமாரிக்க ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு. செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Action announcements are being announced in the budget.

Share via