பங்குனி உத்திர திருநாளில் இரவு திடீரென கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் அச்சம்

by Editor / 19-03-2022 02:04:35pm
 பங்குனி உத்திர திருநாளில் இரவு திடீரென கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் அச்சம்

 கன்னியாகுமரியில் 18ஆம் தேதி பங்குனி உத்திர திருநாளில் இரவு திடீரென கடல் உள்வாங்கியதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலைக்குப்  பிறகு அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கடல்களில் மாற்றங்கள் நிகழ்வது நிதர்சனமான நிகழ்வாக இருந்துவருகிறது.இதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி கடலில் இயற்கை மாற்றங்களும்  நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம்,,கொந்தளிப்பு, கடல் உள்வாங்கும் போது கடல் நீர் மட்டம் தரை தட்டுவது மற்றும் கடல்நீர் மட்டம் உயர்வது கடல் நீரின் நிறம் மாறுவது  அலையின் தாக்கமில்லாமல் கடல்  அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பதும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

 இந்த நிலையில் கன்னியாகுமரி நேற்று இரவு கடல் திடீரென்று உள்வாங்கி காணப்பட்டது சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி இருந்ததால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுக்கள் வெளியே பளிச்சென்று தெரிந்தது. கடற்கரையில் பொழுதுபோக்க திரண்டுவந்த மக்கள் கடல் உள்வாங்கி இருப்பதை பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கைகால்களை கழுவக்கூட அச்சப்பட்டு இடம்பெயர்ந்தனர்.ஆனால் மீனவர்கள் எந்தவித அச்சமுமின்றி வழக்கம்போல் கடலுக்குள் மீன் பிடித்து கரைக்கு திரும்பி வந்த வண்ணம் இருந்தனர்.

 

Tags : Tourists fear the sudden intrusion of the sea on the night of Panguni Uttara Thirunal

Share via