தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

by Editor / 19-03-2022 07:13:41pm
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ:

 தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக அரசு இரண்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள முழுமையான வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண்மைத் துறையின் புரட்சிக்கு வழிகோலி உள்ளது. கடந்த ஆண்டு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 86 திட்டங்களில் 80 திட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டு செயற்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவிலேயே வேளாண்துறையில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : Secretary General of the Government of Tamil Nadu Vaiko on the Agriculture Budget:

Share via